அனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு – போராடி மீட்ட தாய்

(அனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு – போராடி மீட்ட தாய்)

அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த 4 வயதுடைய சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது.
எனினும் கழுகிடம் போராடி சண்டையிட்ட தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.
பின்னர் இந்த கழுகினை பிரதேச மக்கள் இணைந்து பிடித்து அனுராதபுரம் விலங்கு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 வயதான தெவ்மினி அமாயா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது வானில் இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று தாக்கியுள்ளது. சிறுமியின் முதுகு பக்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார்
கழுகு இன்று 4 சிறுவர்களை நான்கு சந்தர்ப்பங்களில் துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.
ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*