இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் உடல் எடை அதிகரிக்குமா..?

(இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் உடல் எடை அதிகரிக்குமா..?)

தூங்குவதற்கு முன்பு பசி ஏற்பட்டால் சிற்றூண்டிகள் உண்ணும் பழக்கம் உள்ளதா? சிற்றூண்டிகள், சாக்லேட், ஜஸ்கிறீம், போன்றவற்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பழங்களை உட்கொள்ளும் பழக்கமும் சிலருக்கு உள்ளது.

பழங்கள் உட்கொள்வதனால் சீனி மற்றும் கலோரிகள் உடலில் அதிகமாகமல் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாது பழங்களில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை நாக்கின் சுவையையும் திருப்திப்படுத்துகிறது.

தூங்குவதற்கு முன் பழங்கள் சாப்பிடுவது சரியானதா?
பழங்களில் அதிகளவான விட்டமின், கனியுப்புக்கள், தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ப் பொருட்கள் இருப்பதனால் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. தூங்குவதற்கு முன் இனிப்புப் பண்டங்கள் மற்றும் கொழுப்புள்ள உணவுகளை உண்பதிற்கு பதிலாக பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதே.

இரவில் என்ன பழங்கள் சாப்பிடுவது சிறந்தது?
இரவில் ஏற்படும் பசியைப் போக்குவதற்கு நார்ப் பொருட்கள் அதிகமுள்ள வாழைப்பழம், ஆப்பிள், போரிக்காய் போன்றவற்றை உட்கொள்வது சிறந்தது.

ஆனால் உணவு அருந்தியதற்கும் பழங்கள் உண்பதற்கும் இடையில் குறிப்பிட்ட கால இடைவெளி இருப்பது அவசியமானது. ஏனெனில் உணவை விட பழங்கள் விரைவாக சமிபாடடைவதுடன்,. விரைவாக சிறுகுடலையும் சென்றடைகிறது.

உணவில் அதிகளவான புரோட்டின் மற்றும் நார்ப் பொருட்கள் இருப்பதனால் சமிபாடடைவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. பழங்களை இரவில் சாப்பிடுவதற்கு பதிலாக மாலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் தூங்குவதற்கு முன்னர் பழங்கள் சாப்பிடுவதனால் அவை விரைவாக சமிபாடடைவதுடன் அதில் உள்ள இனிப்பு உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து தூக்கத்தை கெடுத்து விடுகிறது.

பழங்கள் சாப்பிடுவதனால் உடல் எடை அதிகரிக்கச் செய்கிறதா?
பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை தேவையில்லை. ஆனால் பழங்களை ஜஸ்கிறீன் உடன் சேர்த்து உட்கொள்வதனால் உடல் எடை அதிகரிக்கச் செய்கின்றது. அது மட்டுமல்லாது தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். என்வை தொடர்ச்சியாக இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பழங்களால் சமிபாட்டுப் பிரச்சினை ஏற்படுகிறதா?
இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதனால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், தூக்கத்தையும் கெடுத்து சோம்பல் தன்மையையும் ஏற்படுத்துகிறது.

அது மட்டுமல்லாது அமிலத்தன்மை அதிகமுள்ள பழங்களாம அன்னாசி, தோடம்பழம் சாப்பிடுவதனால் அல்சர் பிரச்சினை அதிகரிக்கின்றது.

மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவதனால் பழங்களில் உள்ள இயற்கையான இனிப்புத் தன்மை இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*