இலவங்கபத்திரி இலையை எரிப்பதால் 10 நிமிடத்தில் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..?

(இலவங்கபத்திரி இலையை எரிப்பதால் 10 நிமிடத்தில் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..?)

பூர்வீக அமெரிக்கர்களின் பாரம்பரியத்தில் புனித இலைகளை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை வாசனையாக வைத்திருக்கும் பழக்கம் இருந்து வந்தது.உங்களுக்கு எப்போதாவது ஏதாவது யோகா நிலையம் அல்லது நவீன விதமான புத்தக கடைகளுக்கு போன அனுபவங்கள் உள்ளதா,அவ்வாறெனில் நிச்சயமாக உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் அதற்கான பிரதான காரணம் அங்கு அவர்கள் இவ்வாறான வாசனைத்திரவியங்களை பயன்படுத்துவதே.

பல மூலிகைகள் இதற்காக பயன்படுத்த படுகின்றன ஆனால் எதில் நாம் அதிக நன்மை பெற முடியும் என்பதை பொருத்து சிறப்பானதை தெரிவு செய்ய வேண்டும் .

• ஏன் இலவங்கபத்திரி இலைகளை எரிக்க வேண்டும் ?
பே லீவ்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த இலவங்க பத்திரி இலைகள் பல சிறப்பம்சங்களை கொண்டவை, குறிப்பாக கிரேக்க மற்றும் ரோமானிய கலாசாரத்திலும் இந்திய மற்றும் கரிபியன் சமையல் கலைகளிலும் இதற்கு சிறப்பானதொரு இடம் இருந்து வந்ததோடு அன்றாடம் நாம் பயன்படுத்த கூடிய கிரீம்கள், சவர்க்காரங்கள், வாசனை திரவியங்கள் என்பவற்றிலும் இந்த இலையின் பங்கு அதிகம் உள்ளது .

• மருத்துவ நன்மைகள்
அடிப்படையில் இந்த இலையானது பல மருத்துவ குணங்களை கொண்டது வலி நீக்கியாகவும் வலித்தடுப்பு மருந்தாகவும் அழற்சி நீக்கியாகவும் செயற்படும் இது பக்டீரியா எதிர்ப்பு மருந்தாகவும் தொழிற்பட கூடியது அதே நேரம் இதயத்துடிப்பு இரத்த ஓட்டம் என்பவற்றை குறைக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு.

• இலவங்க பத்திரி இலைகளை எவ்வவாறு பயன் படுத்துவது
ஏதோவொரு வேளையில் நீங்கள் வேலைப்பழுவிலோ அல்லது ஏதேனுமொரு குழப்பத்திலோ இருக்ககூடும் அப்படியாயின் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மிகவும் இலகுவானதொன்று மட்டுமே உங்கள் அறை அல்லது அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு இலவங்கபத்திரி இலைகளை ஒரு அலுமினிய தட்டில் போட்டு எரிய விட்டு பத்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும், எரிப்பதற்கு முன்னர் ஜன்னல் கதவுகளை அடைத்து கொள்ளுங்கள் அப்போதுதான் வாசனை அதிக நேரம் இருக்க முடியும் அடுத்த விடயம் புகை கண்டுபிடிப்பான் உள்ள ஒரு அறையில் இவ்வாறு எரிக்க வேண்டாம், நிச்சயமாக நீங்கள் வெளியே சென்று திரும்ப அறைக்குள் வரும் போது அந்த வாசனை உங்கள் மனதுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் அந்த புத்துணர்ச்சி உங்களை அந்த நாள் முழுவதும் மலர்ச்சியாக வைத்திருக்கும், அதே நேரம் நீங்கள் அவ்வாறு இலைகளை எரித்து பயன்படுத்திய பிறகு அந்த சாம்பலை வெளியே அகற்றி விடவும்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*