
(உலக வரலாற்றில் முதன் முறையாக “கருந்துளை” (Black Hole) யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது)
உலக வரலாற்றில் முதன் முறையாக “கருந்துளை” (Black Hole) யின் படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
எமது பால்வழி(Milkyway Galaxy) இலிருந்து மிகவும் தொலைவிலுள்ள M87-Galaxy எனப்படும் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கருந்துளையின் படத்தை முதன் முறையாக வானியலாளர்கள் எடுத்துள்ளனர்.
இக் கருந்துளை பூமியைப் விட மூன்று மில்லியன் மடங்கு பெரிதானதும் 400 பில்லியன் கிலோ மீட்டர் விட்டத்தையும் கொண்டது. மேலும் இது 500 மில்லியன் திரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அதே நேரம் இது எமது முழு சூரிய குடும்பத்தின் அளவைக் காட்டிலும் பெரியது.சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு திணிவுடையது. இந்தப் படம் உலகின் பல திசைகளில் இருக்கும் எட்டு தொலைநோக்கிகளின் வலைப்பின்னல் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply