ஒரே நாளில் பூச்சித் தொல்லையை விரட்டியடிக்கும் இயற்கையான மருந்து இதோ..!

(ஒரே நாளில் பூச்சித் தொல்லையை விரட்டியடிக்கும் இயற்கையான மருந்து இதோ..!)

நாம் வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் ஈக்கள், நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிகள் என்பன வந்து கொண்டே இருக்கும். இது எமக்கு எரிச்சலை ஊட்டுவதுடன் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பதை கடினமான காரியமொன்றாக்கி விடும்.

பூச்சிகளை விரட்டும் பொருட்டு நாம் கடைகளில் விற்கப்படும் மருந்து வகைகளை வாங்கி வந்து வீட்டில் தெளிப்பதுண்டு. இது சில சமயங்களில் எமக்கே ஆபத்தாக வந்து விடும் சந்தர்ப்பங்களும் உண்டு.

கடைகளில் விற்கப்படும் மருந்துகளுக்கு பதிலாக நாம் வீட்டிலேயே இதற்கான மருந்தை தயாரிக்கலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. அரை கோப்பை வினிகர்
02. அரைக் கோப்பை ஒலிவ் எண்ணெய்
03. அரைக் கோப்பை ஷம்பூ

செய்முறை
ஸ்பிரே போத்தல் ஒன்றை எடுத்து மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அந்த போத்தலில் இட வேண்டும். பின்னர் அந்த போத்தலை நன்றாக குலுக்க வேண்டும். பின்னர் பூச்சிகள் மற்றும் நுளம்புகள் என்பன அதிகளவில் காணப்படும் பகுதிகளில் இந்தக் கலவையை தெளித்தல் வேண்டும்.

இந்த கலவையானது செல்லப் பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனை உபயோகிக்க ஆரம்பித்து விட்டதும் வீட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஈக்கள், நுளம்புகள் மற்றும் பூச்சிகள் என்பன இறந்து கிடப்பதை நீங்களே அவதானிப்பீர்கள்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*