காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு 10ம் திகதி வரை ஒத்திவைப்பு…

(காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு 10ம் திகதி வரை ஒத்திவைப்பு…)

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, எதிர்வரும் 10ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன்(தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று(07) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*