கொரியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு.

கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக சென்று, குடிவரவு  குடியகல்வு சட்டத்தை மீறிய வகையில்
அந்த நாட்டில் தங்கியிருக்கும் பணியாளர்கள் தண்டணை இன்றி மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் 2019 டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், இது 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையில் 6 மாத காலம் நடைமுறையில் இருக்கும்.

விசா காலத்திலும் பார்க்க அங்கீகாரம் அற்ற வகையில் விசா அனுமதி இன்றி சட்ட விரோதமாக கொரியாவில் தங்கியிருப்போர் இந்த காலப்பகுதியில் கடவுச்சீட்டு, சுயேட்கையாக வெளியேறுவது தொடர்பான அறிவிப்பு மற்றும் போடிங் பாஸ் கொரியாவில் தங்கியிருக்கும் பிரதேசத்தில் குடிவரவு அலுவலகத்திடம் சமர்ப்பிப்பதைத் தொடர்ந்து எந்த வித தண்டப்பணமும் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

அதேபோன்று இவ்வாறான நபர்கள் கறுப்பு பட்டியலில் உள்வாங்கப்படமாட்டார்கள். தேவையாயின் பின்னர் E-9, D-2, D-4, D-8 ரக விசா அனுமதிப்திரத்துக்காக விண்ணப்பிக்க முடியும்.

கொரியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்து பணியாற்றும் இலங்கை பணியாளர்களின் நாட்டில் வாழும் உறவினர்கள் இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி அவர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கு முயற்சிக்க முடியும்.

இது தொடர்பில் உறவினர்கள் கொரியாவில் உள்ளவர்களுக்கு தெளிவுவடுத்துமாறு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1345 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் கொரியாவில் உள்ள குடிவரவு மத்திய நிலையத்தின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*