சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவடையுமா..?

(சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவடையுமா..?)

சாக்லேட் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு. ஆனாலும் இதனை ஒரு சிலர் விரும்புவதில்லை. இரத்த அழுத்தம் குறைவா? மன அழுத்தத்தை போக்க வேண்டுமா? உடனே அனைவரும் எடுத்துக் கொள்வது சாக்லேட்டையே…

சாக்லேட்டில் உள்ள பீனைல்எதைல்அமைன் ஆனது இரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் சிறந்த மனநிலையையும் உருவாக்குகிறது. அத்துடன் கறுப்பு சாக்லேட் மற்றும் சாக்லேட் கேக் என்பவற்றை சாப்பிடுவதனால் உடல் எடை குறைவடையும் என்றால் நம்புவீர்களா?? ஆனால் அது தான் உண்மை. இதனை சில ஆய்வுகளிலும் நிரூபித்து உள்ளனர்.

உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து, அதற்காக பச்சை இலை, காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளுவது போல் கறுப்பு சாக்லேட்டையும் சேர்த்து கொள்வது சிறந்தது.

அது சரி, கறுப்பு சாக்லேடினால் எப்படி உடல் எடையை குறைக்க முடியும்??

காலையில் புரோட்டின் மற்றும் மாச்சத்துள்ள உணவுகளுடன் ஒரு சாக்லேட் உண்பதால் அனுசேப வீதத்தை அதிகரிப்பதோடு கலோரிகள் குறைவடைய செய்யப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*