சுவையான பலாப்பழ அல்வா ரெசிபி!

(சுவையான பலாப்பழ அல்வா ரெசிபி!)

பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், கரோட்டின், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. இத்தகைய மருத்துவ பலன்கள் வாய்ந்த பலாப்பழத்தில் சுவையான அல்வா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! 

தேவையானவை:

கொட்டை நீக்கிய பலாச்சுளை – 5 ( சிறிய துண்டுகளாக்கவும்), பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன் 

பலாப்பழத் துண்டுகள் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். 

பலாச்சுளைகளை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். 

அடிகனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசல், அரைத்த பலாப்பழ விழுது சேர்த்து சூடாக்கி கிளறவும். 

நடுநடுவே நெய் ஊற்றிக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் இறக்கினால் சுவையான பலாப்பழ அல்வா தயார்! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*