டுபாய் சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் அதிரடி – முக்கிய நபர் கைது

(டுபாய் சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் அதிரடி – முக்கிய நபர் கைது)

கொழுப்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும் மஹரகமயில் அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகருடன் இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா அவரது சகோதரரான நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து இன்றிரவு 7 மணியளவில் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது சகோதரரான நடிகர் ரையன் வேன் ரூயனின் வீடுகளை சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
பாடகர் அமல் பெரேராவின் வீட்டில் இருந்து கொக்கேயின் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் மறைவான பகுதி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, ரயன் வேன் ரோயனின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*