தேடலும் முயற்சியும் உள்ள, தந்தைக்கு கிடைத்த அபார வெற்றி

(தேடலும் முயற்சியும் உள்ள, தந்தைக்கு கிடைத்த அபார வெற்றி)

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காணாமல் போன மகனை பதுளையைச் சேர்ந்த தந்தை ஒருவர், மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.
த ஹிந்து நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.
73 வயதான சத்தியபானு என்ற அவரது மகன் எஸ்.சுதர்சன், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் அவரது உடமைகள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளன.
இதனை அடுத்து கேரளாவில் அநாதரவாக்கப்பட்ட அவர், இலங்கையில் தமது தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நீலகிரி – பந்தலூரில் உள்ள தமது உறவினர்களை நோக்கி நடைப்பயணமாக சென்றுள்ளார்.
எனினும் அவர் தமது உறவினர்களை சென்றடையும் போது அவரது உளநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் வசித்து வந்த சுதர்சனை, மூன்று வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை அடையாளம் கண்டுக் கொண்ட போதும், அவரை அழைத்துவருவதற்கான சட்ட சிக்கல்கள் இருந்துள்ளன.
பின்னர் கேரளாவில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சுதர்சன், கடந்த ஆண்டு குணமாகியுள்ளார்.
எனினும் அவருக்கான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, கடந்த தினமே அவரை நாட்டுக்கு அழைத்துவர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*