தையிரோயிட் பிரச்சினையா..? குணப்படுத்த ஒரு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் போதும்…!

(தையிரோயிட் பிரச்சினையா..? குணப்படுத்த ஒரு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் போதும்…!)

தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. இவை ஹைபோதையிரோடிசத்தை குணப்படுத்துவதற்கு பயன்படுகின்றது.

தையிரோயிட் சுரப்பி உடலின் தொழிற்பாட்டிற்கு போதியளவு தையிரோயிட் ஹார்மோன்களை சுரக்காமல் போவதனால் ஹைபோதையிரோயிடிசம் ஏற்படுகின்றது.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் கொழுப்பு அமிலம் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கப்ரிக் அமிலம் பக்டீரியா, வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது. தேங்காய் எண்ணெய்யை சூடான பானங்களில் அல்லது உணவு வகைகளில் சேர்த்துக் கொள்வதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

ஹைபோதையிரோயிட் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள்.

1. உணவு சமிபாடு.

தையிரோயிட் அளவு குறைவடைவதனால் சக்தி குறைவடைந்து உடற் சோர்வு ஏற்படுகின்றது. தேங்காயில் உள்ள கொழுப்பமிலம் உடலில் உள்ள கொழுப்பை சக்தியாக மாற்றுகின்றது. அத்துடன் சமிபாட்டை அதிகரிக்கும்.

2. உடல் எடையைக் குறைத்தல்.

தையிரோயிட் அளவு குறைவடையும் போது எடை அதிகரிக்கின்றது. தையிரோயிட் ஹார்மோன்கள் நேரடியாக ஈரலில் உணவுத் தொழிற்பாட்டை பாதிக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பமிலம் இதனை தடுக்கின்றது.

3. மலச்சிக்கல்.

ஹார்மோன்கள் அளவு குறைவடையும் போது உறுப்புக்களின் தொழிற்பாடும் குறைவடையும் . தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பமிலம் உறுப்புக்களிற்கு தேவையான சக்தியை வழங்கி அதன் செயற்பாட்டை அதிகப்படுத்துகின்றது.

4. வீக்கம்.

ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் தசை மற்றும் மூட்டுப் பகுதிகளில் வீக்கம் வலி ஏற்படுகின்றன. தேங்காய் எண்ணெய் வலிகளையும் வீக்கங்களையும் இலகுவாக நீக்குகின்றது.

5. முடி உதிர்வு.
தையிரோயிட் குறைவடைவதனால் முடி உதிர்வு அதிகரிக்கின்றது. தேங்காய் எண்ணெய் முடிகளின் வேர்களிற்கு உறுதி அளித்து முடி உதிர்வை தடுக்கின்றது.

6.காய்ந்த சருமம்.

சமநிலையற்றஹார்மோன்களால் சருமம் உலர்வடைகின்றன. தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவுவதனால் ஈரப்பதத்தை பேண முடியும்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*