நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி

(நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி)

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது.

நிலவுக்குச் சென்றுகொண்டிருந்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி தரையிறங்க இயலவில்லை.

நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 22 ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த  இஸ்ரேலிய விண்கலமான #Beresheet நேற்றிரவு  சந்திரனில் தரையியிறங்கும் என மிக ஆவலுடன் இஸ்ரேல் எதிர்பார்த்திருந்த நிலையில் சந்திர மண்டல எல்லையில் வைத்து  வெடித்து சிதறியுள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களைப் அனுப்பியுள்ளன.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*