பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து- இம்ரான்கான்

(பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து- இம்ரான்கான்)

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர் 2 அரசு கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.

கவர்னர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ராணுவ தலைமை தளபதி மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பு பயணத்துக்கு சமீபத்தில் தடை விதித்தார்.

இந்த நிலையில், நேற்று மற்றொரு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். பொதுவாக விமான நிலையங்களில் அரசியல் வாதிகள் நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

இனி அவர்களுக்கு விமான நிலையத்தில் அரசு மரியாதை வழங்க கூடாது. மீறி சிறப்பு மரியாதை அளித்தால் விமான நிலைய குடியுரிமை அதிகாரி மற்றும் ஷிப்ட் பொறுப்பு அதிகாரியும் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவர் என உள்துறை அமைச்சகம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்தார்.

இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரை முதன் முறையாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உமர் ஜாவீத் பஜ்வா சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். #PakistanAirport  #Imrankhan

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*