பிரபல சீன ஓவியர் Tang Jian wen வரைந்த ஓவியம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(பிரபல சீன ஓவியர் Tang Jian wen வரைந்த ஓவியம் ஜனாதிபதியிடம் கையளிப்பு)

சீன நாட்டின் பிரபல ஓவியர்களுள் ஒருவரான Tang Jian wen வரைந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உருவப்படம் அண்மையில் (12) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது,

சீன – இலங்கை ஒத்துழைப்பில் தயாரிக்கப்படும் “You are always with me” தொலைக்காட்சி நாடகத் தொடரினை திரையிடும் நிகழ்வில் கலந்துகொண்ட சீன கலைஞர்கள் குழுவினருடன் வருகை தந்திருந்த ஓவியர் Tang Jian wen இவ்வுருவப்படத்தை ஜனாதிபதி  கையளித்தார்.

இலங்கை மன்றத்தின் தலைவர் சரத் கோன்கஹகே, தேவிந்த கோன்கஹகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் விழிவெண்படலத்தை தானம் செய்யும் செயற்திட்டத்தின் கீழ் விழிவெண்படலத்தை தானம் செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்மை நாடாக இலங்கை சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சீன ஜனாதிபதி ஷீ ஜன் பிங் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட பட்டுப்பாதை எனப்படும் சர்வதேச செயற்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் பூரண அனுசரணையில் விழிவெண்படலத்தை தானம் செய்யும் தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான சர்வதேச மற்றும் உள்நாட்டு கலாசார நட்புறவை எடுத்துரைக்கும் வகையில் இந்த நாடகத் தொடர் தயாரிக்கப்படவுள்ளது.

சீன இயக்குனர் ஸ்வீ யாலியின் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இலங்கை இயக்குநர் தேவிந்த கோன்கஹகேவின் நிறைவேற்று இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவரவுள்ள முதலாவது சீன இலங்கை சர்வதேச மற்றும் உள்நாட்டு கலாசார ஒத்துழைப்பு நாடகத் தொடரான நீ யுங் யுஆ டிசை வோ சென்பியென் “You are always with me”  (எப்போதும் நீ என்னோடு) நாடகத்தை திரையிடும் நிகழ்வு நேற்று (13) விசேட அதிதிகளின் பங்குபற்றலில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் இடம்பெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*