பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானம்

(பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானம்)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய
கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ​ஜனாதிபதியின் உத்தி​யோகபூர்வ வாசஸ்தத்தில் இரவு 7 மணியளவில் கூடியது. மொட்டு கட்சி  பலமடைந்துள்ளதல்லவா? சுதந்திரக் கட்சியை காப்பாற்ற முடியுமா? உங்களுக்கு, மொட்டு சவால் இல்லையா?  என ஊடகவியலார்களால் கேட்கப்பட்டது..

இதன்போது கருத்து தெரிவித்த  கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச எவ்வளவு முயற்சித்தாலும், சுதந்திரக் கட்சியை அழிக்க முடியாது. மொட்டு கட்சி  சவால் இல்லை. இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்கி, தற்போதைய பிரதமர் அதன் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நாம் இந்தப் பயணத்தை ஆரம்பிப்போம். பொது நோக்கத்திற்காக அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். எதிர்வரும் தேர்தலுக்குத் தயார். பொது எதிரி ஐக்கிய தேசியக் கட்சி என நாம் நினைக்கிறோம்  என பதிலளித்துள்ளார்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*