பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பம்

(பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பம்)

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று(16) முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றடைந்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் 53 பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ் உச்சி மாநாடானது, சுபீட்சம், ஜனநாயகம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தேசங்களின் பன்முக சமூகத்தினர் ஒன்றாக செயற்படுவதே பொதுநலவாயமாகும்.

பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாட்டின் போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் பொதுவான விழுமியங்களை மீளுறுதி செய்யவும், தாம் முகங்கொடுக்கும் உலகளாவிய சவால்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக இளம் வயதினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவற்றை அடையாளப்படுத்துவதற்காக ஒன்றுகூடுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*