போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியப்பிரமாணம் செய்த ஊர்மக்கள்

(போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியப்பிரமாணம் செய்த ஊர்மக்கள் #இலங்கை)

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியப்பிரமாணம்
செய்த நிகழ் வொன்று கணமூலையில் இடம்பெற்றது.

நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் போதைப் பொருள் பாவனை இளை ஞர்களின் எதிர்காலத்தை மட்டுமன்றி, சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

இதனை இல்லாதொழித்து போதைப்பொருளற்ற முன்மாதிரிமிக்க ஒரு கிராமத்தை உருவாக்குவ தற்கான செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவினைத் தொடர்ந்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளம், கணமூலை பெரிய பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள், சமூக அபிவிருத்தி அமைப் புக்கள் ஆகியன இணைந்து போதைப் பொருளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்,
தூய கணமூலையை கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளில் போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்ட மொன்றினை கணமூலை பிரதேசத்தில் முன்னெடுத் துள்ளனர்,

இதன் ஒரு நிகழ்வாக ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று கணமூலை சேகு அலாவுதீன் விளை யாட்டு மைதானத்தில்
நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா வினைத் தொடர்ந்து ஊர்மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவோம் என்ற சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*