“மஹிந்த ஜனாதிபதியாக, எந்தவித தடையும் இல்லை” – சரத் என்.சில்வா

(“மஹிந்த ஜனாதிபதியாக, எந்தவித தடையும் இல்லை” – சரத் என்.சில்வா)

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக போட்டியிட முடியுமென, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மஹிந்த, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக எந்த சட்டப் பின்னணியும் இல்லை. அத்துடன் அரசியல் சட்டத்திருத்தத்தின் ஊடாகவும் தேர்தலில் போட்டியிட முடியும்.

அந்த வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த போட்டியிட்டால் அவரை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை ஏதும் இல்லை.

ஆனாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தேர்தல் தொடர்பாக மேன்முறையீடு மாத்திரமே செய்ய முடியும்” என சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*