மாகந்துர மதுஷை விடுதலை செய்ய பிரபல சட்டத்தரணிகள் 12 பேர் களத்தில்

(மாகந்துர மதுஷை விடுதலை செய்ய பிரபல சட்டத்தரணிகள் 12 பேர் களத்தில்)

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துர மதுஷை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில்
துபாயைச் சேர்ந்த 12 சட்டத்தரணிகள்,  ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணிகளின் உதவியுடன் தப்பித்துக் கொள்ளும் நோக்கில் பல கோடி ரூபா பணத்தை மதுஷ் தரப்பினர் செலவிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் பிரபல சட்டத்தரணிகள் இவ்வாறு மதுஷை விடுதலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மதுஷின் இரண்டாவது மனைவி மற்றும் டுபாயில் ஒளிந்திருக்கும் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இவ்வாறு விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, டுபாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் உளவாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இலங்கை ஊடகங்களில் பிரசூரிக்கப்பட்டமை குறித்து டுபாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Souce : http://divaina.com/daily/index.php/puwath-2/23815-2019-02-07-12-26-36

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*