மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் அறிமுகம்…

(மீன்பிடி வள்ளங்களுக்கு ஜி பி எஸ் தொழிநுட்பம் அறிமுகம்…)

மீனவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி பி எஸ் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் திணைக்கள பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மீனவர் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத கொடுக்கவாங்கல் வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து செல்லும் கடற்தொழிலாளர்களின் கைவிரல் இயந்திரத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்யப்பின்னர் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவசர அறிவிப்பு காலநிலை அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கும் குறுந் தகவல்களை பரிமாறுவதற்கும் 2 மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*