லெப்டினன்ட் கர்னல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற மடவளை பஸார் சித்தீக் ரியாஸ் முஹம்மத்.

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் A.H.M சித்திக் மற்றும் ஆசிரியை ஹாஜியானி N.N.M சித்திக் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் 
S.M. ரியாஸ்  முஹம்மத் அவர்கள்   லெப்டினன்ட் கர்னல் தரத்திற்கு பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.

1996. 10.06  ஆம் திகதி சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து 2000 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் உள்ள ஒரு படைப்பிரிவான இலங்கை மின்னியல் இயந்திரவியல் பொறியியல் படைப் பிரிவில் (Sri Lanka electrical and mechanical engineer) இணைந்து  தற்போது இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏழாவது இலங்கை மின்னியல் இயந்திரவியல் பொறியியல் படைப் பிரிவின் கட்டளைத் அதிகாரியாக கடமை புரிந்து வருகிறார்.
 இந்நிலையில் இவர் தற்போது லெப்டினன்ட் கர்னல் ஆக  பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*