வீட்டிலிருந்து இயற்கையாக நுளம்பை விரட்டுவது எப்படி?

(வீட்டிலிருந்து இயற்கையாக நுளம்பை விரட்டுவது எப்படி? )

கோடைகாலம் என்றாலே எல்லோருக்கும் சந்தோக்ஷம் அதிகரித்து விடும். நீண்ட பகல் நேரம், சந்தோக்ஷமான கடற்கரை விளையாட்டுக்கள் என அணைவரையும் குதூகலத்தில் அதிகரித்து விடும். ஆனால் இதற்கெல்லாம் முட்டுக் கட்டையாக நுளம்புகளின் தொல்லை அணைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.

ஆனால் இதை எண்ணி கவலைப்பட தேவையில்லை. அதற்கான தீர்வு மிகவும் எளிதானதே. நுளம்புகளை விரட்ட நமது உடலிற்கு தேவையானது விட்டமின் பி1 எனப்படும் தையமின். இது ஈஸ்ட். சிவப்பு அரிசி, ஓட்ஸ் உணவு, அஸ்பரகஸ், காலே, ஈரல், முட்டை போன்றவற்றில் அதிகம் செறிந்துள்ளது.

விட்டமின் பி1 இலகுவாக நீரில் கரையும் தன்மை இருப்பதனால் சிறுநீர் மூலம் இலகுவாக வெளியேறி விடுகிறது. ஆனால் உடலில் போதியளவு விட்டமின் பி1 இருப்பதனால் அதன் வாசனை நுளம்பை அருகில் நெருங்குவதை தடுக்கும்.

தினமு 100 கிராம் விட்டமின் பி1 எடுத்துக் கொள்வதனால் நுளம்பு கடிப்பது குறைவதை இரண்டு வாரங்களில் உணருவீர்கள். அத்துடன் இன்னொர்உ தீர்வாக நுளம்பை விரட்டுவதற்கான திரவத்தை நீங்கள் வீட்டில் தயாரித்துக் கொள்ள முடியும்.

இயற்கையாக நுளம்பை விரட்டுவது எப்படி?

தேவையான பொருட்கள்:
• இலைச் சாறு.
• கொதித்தாறிய நீர்.
• தேயிலை மர எண்ணெய்.
• லாவண்டர் எண்ணேய்.

செய்முறை:
ஸ்பிறே போத்தலில் பாதி அளவுக்கு சூடான நீரை நிரப்பி, அதனை ஆற விடவும் அதில் அரைத் தேக்கரண்டி இலைச் சாற்றை சேர்த்து அத்துடன் 15 துளி தேயிலை மர எண்ணெய்யையும், 15 துளி லாவண்டர் எண்ணெய்யையும் சேர்த்து ஸ்பிறேயை தயாரித்து பயன்படுத்துங்கள்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*