வீட்டிலேயே மூட்டுக்களை வலிமைப்படுத்த இதோ எளிய 10 குறிப்புக்கள்..!

(வீட்டிலேயே மூட்டுக்களை வலிமைப்படுத்த இதோ எளிய 10 குறிப்புக்கள்..!)

மூட்டுக்கள் உடலைத் தாங்கிப் பிடிப்பதற்கும் கால்களின் அசைவுகலிற்கும் முக்கியமானது. ஆனால் இவை வயதடையும் போது வலிமை குறைவது சாதாரணமானதே. அத்துடன் மூட்டுக்கலில் வலிகள் ஏற்படுவதற்கு, காயங்கள், வாழ்க்கை முறை, புகைப் பிடித்தல், மதுபானம் போன்றவற்றாலும் ஏற்படுகின்றது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் இதனைக் குணப்படுத்த முடியும்.

மூட்டுக்களின் வலிமையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. கல்சியம்.
கல்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது எனவே கல்சியம் அதிகம் உள்ள பால், பாலாடைக்கட்டி, கீரை வகைகள், பாதாம், சீரியல் போன்றவற்றை உட்கொள்வதுடன் விட்டமின் டியையும் சேர்த்துக் கொள்வதனால் கல்சியம் உடலால் உறிஞ்சுக் கொள்வதை அதிகப்படுத்த முடியும்.

2. வீக்கத்தை கட்டுப்படுத்தும் உணவுகளை உட்கொள்ளுதல்.
வீக்கத்தினால் மூட்டுக்களில் வலிகள் ஏற்படுவதுடன் வலிமை இழந்து போகிறது. எனவே வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகளான இஞ்சி, மஞ்சள், கீரை, அவகோடா போன்றவற்றை உட்கொள்வது சிறந்தது.

3. நீச்சல்.
தினமும் அரை மணி நேரம் நீச்சல் அடிப்பதனால் மூட்டுக்கலுக்கும் முழங்காலுக்கும் சிறந்த அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.

4. உடற்பயிற்சி.
மூட்டுக்களையும் அதனைச் சுற்றியுள்ள தசைகளையும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை வாரத்திற்கு 5 தடவைகள் அரை மணி நேரம் செய்வதனால் வலிமை அடையும்.

5. விட்டமின் சி.
குருத்தெலும்புகள் உருவாவதற்கு முக்கியமானது விட்டமின் சி. இது எலும்புகள் உடைவதை தடுப்பதுடன் அதனை வலிமைப்படுத்த உறுதுணையாக உள்ளது.

6. எப்சம் உப்பு.
மூட்டு வலிக்கு மக்னீசியம் குறைபாடு காரணமாக இருப்பதனால், மக்னீசியம் செறிந்துள்ள எப்சம் உப்பினை 2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் நீரில் கரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்பு கழுவவும். வாரத்திற்கு இரு தடவைகள் இதனைப் பின்பற்றுவது சிறந்தது.

7. விட்டமின் டி.
விட்டமின் டி குறைவடைவதனால் எலும்பிகள் வலு இழந்து உடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. அத்துடன் இதன் சிறப்பு எலும்புகளிற்கு தேவையான் கல்சியத்தை அதிகளவில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே தினமும் காலையில் சூரிய வெளிச்சத்தில் குறைந்தது 15 நிமிடங்களாவது செலவிடுவதனால் உடலிற்கு தேவையான விட்டமின் டி கிடைக்கும்.

8. மசாஜ்.
தினமும் இரு தடவைகள் இதமான சூடான ஒலிவ், தேங்காய், கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தி மூட்டுப் பகுதிகளில் மசாஜ் செய்து வருவதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்துகளும் கிடைத்து மூட்டுக்கள் வலி நீங்கி வலிமை அடைகிறது.

9. மீன் எண்ணெய்.
மீன் எண்ணெய்யில் ஒமேகா-3 உள்ளதால் எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்துவதுடன் மூட்டுக்களையும் வலிமைப்படுத்துகிறது.

10. ஆரோக்கியமான உடல் எடை.
அதிகமான உடல் எடையால் மூட்டுக்களில் அழுத்தம் அதிகரித்து பாதிப்பு ஏற்படும். எனவே உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ற உடல் எடையைப் பேணுவது அவசியமானது.

மேலும் சில குறிப்புக்கள்.
• உயர் குதிகால் உள்ள பாதணிகளை தவிர்த்தல் சிறந்தது.
• மதுபானங்கள், புகைப் பிடித்தல் பழக்கங்களையும் தவிர்த்தல்.
ஒரே நிலையில் உட்காருதல், நிற்றல் போன்றவற்றை தவிர்த்தல்.
• யோகாசனங்களைச் செய்தல்.
• அதிகமான திரவத்தை உட்கொள்வதனால் குருத்தெலும்புகள் மிருதுவாகும்.
• மூட்டுப் பகுதிகளிற்கு வலிகளை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்த்தல்.
• சைக்கிள் ஓடுதல், நடத்தல் போன்றவற்றால் மூட்டுக்கள் வலிமையடையும்.
• உப்பை குறைந்த அளவு உட்கொள்வதனால் கல்சியம் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
• திடீரென அசைவுகளை ஏற்படுத்தல், குதித்தல் போன்ற செயல்களை தவிர்த்தல் அவசியம்

 

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*