எனது பயணம் எப்படி அமையும் என கூற முடியாது, சிலவற்றை நினைக்கும் போது சிரிப்பு வருகிறது
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரத்தின்படி எந்நேரமும் எதுவும் நடக்கலாம், எவருக்கும் பதவிகள் நிரந்தரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து…
வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்
தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும். இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும்…
மருந்து தட்டுப்பாடு… பாம்பு கடிக்கு இலக்காகிய 15 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.
அனுராதபுர பிரதேசத்தில் விரியன் (புடையன்) பாம்பு கடிக்கு இலக்காகி 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளான். பாம்புக்கடிக்கு இலக்கானவர்களுக்கு வழங்கப்படும் விஷமுறிவு மருந்துக்கு பின் கொடுக்கப்பட வேண்டிய அலர்ஜி தவிர்ப்பு மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில்…
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.…
முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது. கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த…
பாவனையாளர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் விநியோகம் உட்பட புதிய முறைகளை அறிமுகப் படுத்தும் எரிசக்தி அமைச்சர்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் எரிபொருளை வாடிக்கையாளருக்கு விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதி நிலைமையை வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான…
ட்ரோ எரிவாயு விநியோகம் சாத்தியமில்லை: வெளியானது காரணம்
லிட்ரோ நிறுவனத்திற்கு எரிவாயு ஏற்றி வந்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் லிட்ரோ நிறுவனம் உள்ளதாக தெரியவந்துள்ளது. டொலர் இன்றி லிட்ரோ நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.…
பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் கவலைக்குரியது: ரணில் வேதனை
இலங்கையில் தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெரும் கவலைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் நாளைய தினம் (13) மட்டுப்படுத்தப்பட்டளவில் தமது சேவையை வழங்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின்…
இலங்கையில் பாடசாலை நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.