• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • விளாமிடிர் புடினிடமிருந்து மைத்திரிக்கு வந்த தகவல்

விளாமிடிர் புடினிடமிருந்து மைத்திரிக்கு வந்த தகவல்

ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யூரி மேட்டேரியினால் இன்று (22) கையளிக்கப்பட்டது. Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால…

யாழில் பேருந்தில் பணத்தை தவறவிட்ட மூதாட்டி! உதவிய போக்குவரத்து பிரிவு பொலிஸார்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரொருவர் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளார். வங்கியிலிருந்து 96,000 ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார்.

உறக்கமின்றி எரிபொருள் பெற நின்றவர் உயிரிழப்பு

பண்டாரகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஒன்றரை நாட்களாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, வெவிட்ட சந்தியில் வசிக்கும் கயான் ஷசிக பெரேரா என்ற 42 வயதுடைய ஒரு…

மணல் விலை மலையளவு உயர்ந்தது, நிர்மாணத் தொழில்துறை முடங்கியது

மணல் விலை உயர்வு காரணமாக கொழும்பு, கம்பஹா மட்டுமன்றி நாடுபூராகவும் நிர்மாணத் தொழில்துறை முடங்கிப் ​போயுள்ளது. மணல் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதால், நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளன. கொழும்பு, கம்பஹா…

மக்கள் தாக்குப் பிடிக்க வேண்டும், பொறுமை இல்லையேல் பஞ்ச நிலைமைக்கு தள்ளப்படுவோம்

பொதுமக்கள் அடுத்த மாதம் வரை பொறுமையுடன் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு பொதுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறித்து…

மத்திய வங்கியின் ஆளுநரை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் பிரதமரின் பரிந்துரை வேண்டுமென்கிறார் ஜனாதிபதி

நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நந்தலால் வீரசிங்கவை இந்த மாத இறுதிக்குள் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கத் திட்டமுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில்,…

Mp ஆகினார் தம்மிக்க

பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ரணிலின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொழும்பு பிளவர் வீதியில் பொலிஸாரால் போடப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால்…

வெளிநாட்டுக்கு போகத் துடிப்பவரா நீங்கள்..? அதற்கு முன் இதை படியுங்கள்

இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர அறிவுறுத்தலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

குறைந்தபட்ச வயது 21 ஆக திருத்தம்

இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 உம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு 21 உம்…