• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • ரணில் பதவியேற்று ஒருமாதம் ஆகியும் முன்னேற்றம் இல்லை – சம்பிக்க

ரணில் பதவியேற்று ஒருமாதம் ஆகியும் முன்னேற்றம் இல்லை – சம்பிக்க

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பிரதமர் பதவியை ஏற்க எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதனை நான் பெருமையாக கருதுகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக எனக்கு…

இந்த சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.. கடும் நடவடிக்கையும் எடுப்போம். ; ஐ .ஓ.சி

பம்பலப்பிட்டியில் தனிநபர் ஒருவருக்கு கேன்களில் எரிபொருளை வழங்கிய எரிபொருள் பவுசருக்கு எதிராக இன்று கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த தவறான நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆழ்ந்த வேதனையை…

பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்.

பெற்றோல் வாகன உரிமையாளர்களை அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய CPC பெற்றோல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.…

நாளை (20) முதல் பகல் நேர மின்வெட்டு இல்லை

.நாளை (20) முதல் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்து இன்று (19) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்த மின் உற்பத்தி மற்றும் நிலவும் தேவையை கருத்திற் கொண்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக…

2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.த சாதாரன தர பரீட்சை பிற்போடப் பட்டது

– அறிவிப்பு வெளியானது2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரதர பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், கருப்பு சந்தையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 77 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனகாம்பிகைகுளம் பகுதியில் 12 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது, அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாவுக்கு டீசல்…

3 பெண்களிடமிருந்து பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் மீட்பு.

3 பெண்களிடமிருந்து பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் மீட்பு. சென்னையிலிருந்து இலங்கைக்கு பயணிக்க இருந்த 3 பெண்களிடம் சுமார் 34 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து நேற்று கொழும்புக்கு புறப்பட இருந்த விமானத்தில், திருச்சி…

20’ வருடங்களில் பின்னர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இலங்கை !

!இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில், 6…

பதுக்கி வைத்திருப்பவர்களை, பாய்ந்து பிடியுங்கள் – ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதுமான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக அரச…

அரச ஊழியர்களும், கல்வி துறையினரும் 2 வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி

அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது. அதற்கமைய, அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை…