• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை விநியோகம் செய்யும் முறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில்…

அரிசி தாருங்கள் – பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை

எதிர்கால நுகர்வுக்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை பங்களாதேஷிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின்…

அடுத்த 3 மாதங்களுக்கு, வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து,…

எரிபொருள் நெருக்கடி தொடருமானால், வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால், வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன, அனைத்து பஸ் உரிமையாளர்களும்…

அம்பாறை மாவட்டத்தில் அரிசி விலை மோசடி, பதுக்கல் செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு.

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண…

இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

கதிரையில் இருந்து விழுந்து, ஒருவயது குழந்தை மரணம் – பெற்றோர் சமயலறையில் இருந்தபோது சம்பவம்

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கதிரையில் இருந்து கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக குழந்தை,…

இலங்கையில் மூடப்படும் பழக்கடைகள்

கொழும்பு புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கிய வெளிநாடுகளில் உள்ள நலன்விரும்பிகள்

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள்…

அரச சேவையாளர்களுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை வழங்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றால், அரச பிரிவுகளுக்கு நான்கு நாட்கள் மாத்திரமே வேலைநாட்களாக வழங்கப்படும். அனுமதி கிடைத்தால், அதனை இந்த வாரத்திலேயே அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தினேஷ்…