ICU நோயாளி, வைத்தியசாலைக்கு முன்பாக சடலமாக மீட்பு
காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது
யட்டியந்தோட்ட பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. தவிசாளர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் சூரிய குமார் சுமித்ரன் உட்பட 12 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பட்ஜெட் முன்மொழிவுக்கு ஆதரவாக…
அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?
அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரானது பேர்த்தில் நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இம்முதலாவது போட்டியில் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் மற்றும் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ்…
476 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ்
அயர்லாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்ப்பூரில் புதன்கிழமை (19) ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களைப் பெற்றது. லிட்டன் தாஸ் 128, முஷ்பிக்கூர் ரஹீம் 106,…
ஜப்பான் துறைமுகத்தில் திடீர் தீ: 170 கட்டிடங்கள் எரிந்து நாசம்
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த…
மகனுக்காக உயிரை விட்ட தந்தை – இலங்கையில் உணர்வுபூர்வமான சம்பவம்
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத்…
ரொனால்டோவிற்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த டிரம்ப்
அமெரிக்கா சென்றுள்ள சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து…
சிம்பாப்வேயை வென்ற பாகிஸ்தான்
இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் சிம்பாப்வே: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன்…
வெள்ளத்தில் சிக்கிய மீன் வகைகள்
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக் கல்முனை , சேனைக்குடியிருப்பு,…
பங்களாதேஷை வெல்லுமா அயர்லாந்து?
பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சியல்ஹெட்டில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பங்களாதேஷ் வென்ற நிலையில், இப்போட்டியை வென்றாலே அயர்லாந்து சமப்படுத்த முடியும். அதற்கு போல் ஸ்டேர்லிங்க்,…