• Sun. May 24th, 2026

உடல் எடையை சீக்கிரமாக குறைக்கும் சோம்பு தண்ணீர் – எப்போது பருக வேண்டும்?

Byadmin

Mar 15, 2022

சோம்பு கலந்த தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும், தினமும் வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்து வந்தால், எடை குறையும், கண் பார்வை தெளிவடையும். இவை வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் சீர் செய்கிறது.

அடுத்து, சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கண்களின் பலவீனத்தை நீக்கும் என்று நம்பப்படுகிறது. சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது. வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்தால், உடல் எடையை சீராக வைப்பதோடு, உடல் பருமனையும் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *