• Sun. May 24th, 2026

குழந்தைகளை விற்கும் கும்பல் குறித்து எச்சரிக்கை

Byadmin

Nov 24, 2023

இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான்  பிரசன்ன அல்விஸிடம் இன்று (23)  அறிக்கை சமர்ப்பித்துள்ளது,

இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கையை  முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பெண்ணான கே. பிரியங்கிகா சாமந்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தார்.

முன்வைக்கப்பட்ட அறிக்கையை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *