• Sun. May 24th, 2026

நீரில் மூழ்கி உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு பதவி உயர்வு!

Byadmin

Nov 25, 2023

சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போதே குறித்த உத்தியோகத்தர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, ​​அவரை மீண்டும் கைது செய்ய கால்வாயில் குதித்த அதிகாரி நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *