• Sun. May 24th, 2026

இலங்கையின் ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்த விசேட கவனம்!

Byadmin

Oct 16, 2024

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சென்டையில் எட்வின் ஷல்க் (Sandile Edwin Schalk) தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு தென்னாபிரிக்கா அரசின் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு நேற்று (15) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளை மேம்படுத்தல், நாட்டின் உற்பத்தித் துறையை பலப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் மற்றும் கல்வித் துறையில் மறுசீரமைப்புகளை தொடர்வது, மகளிர் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *