• Sun. May 24th, 2026

கொழும்பு பங்குச் சந்தை அசுர வளர்ச்சி

Byadmin

Feb 1, 2025

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கொழும்பு பங்குச் சந்தை 7.39% வளர்ச்சியை அடைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 15,944.61 புள்ளிகளாக பதிவான அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண், இன்று (31) அனைத்து பங்கு பரிவர்த்தனைகளின் முடிவின் போது 17,122.7 புள்ளிகளாக அதிகரித்திருந்தது.

இது வரலாற்றில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் பதிவு செய்த மிக உயர்ந்த புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.15 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன் உள்நாட்டு கொள்முதல்கள் 5.04 பில்லியன் ரூபாவாகவும் மற்றும் உள்நாட்டு விற்பனை 4.63 பில்லியன் ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது.

மேலும், வெளிநாட்டு கொள்முதல்கள் 118 மில்லியன் ரூபாவாகவும்  மற்றும் வெளிநாட்டு விற்பனை 524 மில்லியன் ரூபாவாகவும்  பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *