• Sun. May 24th, 2026

இலங்கையில் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கௌரவம் – மோடி மகிழ்ச்சி

Byadmin

Apr 5, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருது, இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கெளரவம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது இலங்கைக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவையும் ஆழமான நட்பையும் காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *