• Sun. May 24th, 2026

நாடே தேடிய நபரை, பிடிக்க உதவிய விதுஷாஞ்ஜனி (விது)

Byadmin

Nov 18, 2025

பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து, இறக்குவானையில் கல்வி பயின்ற இறக்குவானையின் புதல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் விதுஷாஞ்ஜனி.

அவரது சேவை குறித்து, பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடக அறிவித்துள்ளார்.

சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய தகவல்களை திரட்டி. நடவடிக்கை எடுத்தது விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானை மண்ணுக்கு பெருமை.

முருகானந்தம், சுகுனா ஆகியோரின் அன்பு மகளே விதுஷாஞ்ஜனி

வாழ்த்துக்கள் விதுஷாஞ்ஜனி முருகானந்தம்

Ranjan Arun Prasadh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *