அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி

(அக்குறணை இளைஞர்களின் முன்மாதிரி)

இலங்கைக்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரது  இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெலிநாட்டு  பணம் மற்றும் அடையால அட்டை உற்பட முக்கிய ஆவனங்கள் உள்ளடங்கிய கைப்பை  கண்டிநகரில் விழுந்திருக்கையில்  கண்டெடுத்த ஆறு  இளைஞர்கள் அதன் உறிமையாலரை கண்டறிந்து இன்று 23 ம் திகதி இரவு கையளித்தனர். நேற்று 22  மாலை கண்டி நகர வீதி ஒன்றில் சென்றுகொண்டிருந்த அக்குறணையை சேர்ந்த இளைஞர்கள் இக்கைப் பையை கணடெடுத்துள்ளதுடன் அதில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் முக்கிய ஆவனங்கள் இருப்பதை கண்டுள்ளனர். பின்னர் அதனை தமது உரவினர்களிடம் கான்பித்து  அதன் உறிமையாலரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டி குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்தின் அஸ்மி அவர்கள் இது தொடர்பாக  ஈராக் தூதுவராலயத்துடனும் தொடர்புகொண்டு  அதன் உறிமையாலரை கண்டறிந்துள்ளதுடன் அவர்  ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசியிர் ஒருவர் என்றும் தெரிந்துகொண்டுள்ளனர்.
அதன் பின் நேற்று 23 ம் திகதி இரவு அவரை குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்திற்கு அழைத்து அவரது பணம் உற்பட ஆவனங்களை அவரிடம் வழங்கப்பட்டது. ஈராக் நாட்டின் பேராசிரியர் முஹம்மத் அன்வர் மஹ்மூத் என்ற இவர் இலங்கை நாட்டை சேர்ந்த  இவ்   இளைஞர்களின் சேவை  பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தொடர்பாக தான் பெருமை படுவதாகவும் தெரிவித்தார்.
இக் கைப்பையை கண்டெடுத்த இளைஞர்களான  மொஹமட் ரஸீம்,  ஆகில்,  நிஷாத், ஷப்னி, ஷாகிர், ஸஹ்ரான் ஆகிய இளைஞர்கள் இப் பணத்தை  அதன் உறிமையாளரான பேராசிரியரிட் ஒப்படைத்தனர்

-மொஹொமட்  ஆஸிக்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*