அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை

(அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வது திருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை)

அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் JVP அங்கம் வகித்துகொண்டு 20 வதுதிருத்தத்தை கொண்டுவருவது நகைச்சுவை என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம்வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்புநேற்று பத்­த­ர­முல்லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத்தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரப்­போ­வ­தில்லை. மாறாக வடக்­கி­லுள்ள மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கே புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக கதை­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. மேலும் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்தநல்­லாட்சி அர­சாங்கம் வடக்கில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ள­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்தச் சட்டம் கொண்­டு­வர வேண்­டியஅவ­சியம் இல்லை. ஏனெனில் அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வ­தற்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பு சபை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தே­சத்­திடம் தெரி­வித்­துள்ளார்.

அவ்­வா­றெனின் ஏன் அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்தச் சட்­டத்தைகொண்டுவர முனைய வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில்மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் அங்கம் வகிக்­கி­றது. ஆகவே வழி­ந­டத்தல்குழு­வி­லேயே அது குறித்து பேசித் தீர்­மா­னித்­தி­ருக்­கலாம். அத­னை­வி­டுத்துஇரு­ப­தா­வது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை.

ஆகவே நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றப்­போ­வ­தில்லை.வடக்­கி­லுள்ள மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கே புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ர­வுள்­ள­தான கதை­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது.மேலும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. தற்­போதும் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளையேமேற்­கொள்­கி­றது.

மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்­கின்ற நிலைப்­பாடு அர­சாங்­கத்­திடம் இல்லை. இந்­தியப் பிர­தமர் இணைய வழி­மூலம் நேர­டி­யாகபேசு­வ­தென்­றாலே யாழ்ப்­பாணம் செல்லும் ஞாபகம் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் வரு­கி­றது. இல்­லை­யென்றால் அவர்கள் அங்கு செல்­வ­து­மில்லை,அப்­பி­ர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­து­மில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் ஒரு­போதும் பதாளஉலகக் குழுக்­களை இணைத்­துக்­கொண்டு ஆட்சி நடத்­த­வில்லை. ஆனால் தற்­போ­தைய நிலை எவ்­வா­றுள்­ளது என்­பது அனை­வ­ருக்கும் நன்கு தெரியும். அத்­துடன் தற்­போ­தைய ஜனா­தி­பதி, தான் இரவு பத்து மணிக்கு உறக்­கத்­திற்குச்சென்று காலை எட்டு மணிக்கு எழுந்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.எனினும்வேறு நாடு­க­ளி­லுள்ள அர­சியல் தலை­வர்கள் நீண்ட நேரம் பணி­யாற்­று­வதனை அறிந்­து­கொள்ள முடி­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ24 மணி நேரமும் நாட்­டுக்­காக சேவை­யாற்­று­ப­வ­ராக இருந்தார்.

மேலும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு அக்­கு­ழுவின் அறிக்­கைக்குஇணங்க அர்ஜுன் அலோசியஸ் கைது­செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.ஆகவே அதுகுறித்து பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்­தப்­பட வேண்டும். எனினும் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­வரும் பத்­தி­ரிகைச் செய்தி ஒன்று தொடர்பில் விவாதம்நடத்­து­கின்­றனர். அவ்­வி­வா­தத்தின் போது பாரா­ளு­மன்­றத்தின் கோரத்­தைக்­கூட பாது­காத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை.

அத்­துடன் “நியூயோர்க் ரைம்ஸ்” பத்­தி­ரிகைச் செய்தி விவ­காரம் குறித்து நாள்ஒன்­றுக்கு  ஐந்து  மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­ப­டு­வ­தாக ஊடகம் ஒன்றுதெரி­வித்­துள்­ளது. எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  உட்­படஎமக்கு சேறு பூசு­வ­தற்கே குறித்த நிதியை செலவு செய்­கின்­றனர்.  மேலும்கடந்த தேர்தல் காலத்­தின்­போது தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஸ்ரீலங்காசுதந்­திரக் கட்­சிக்கு சில தரப்­பினர் நிதி வழங்­கி­யுள்­ளமை  தெரிய வரு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*