உங்க குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா? அப்போ இத படிங்க..!

Urine infection in children everything you need to know

(உங்க குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா? அப்போ இத படிங்க..!)

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் பெற்றோர்களின் தூக்கம் கலைவதுடன் படுக்கை துணியை மாற்றி, எல்லாவற்றையும் சுத்தம் செய்து மீண்டும் படுக்கைக்கு செல்லுவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

குழந்தைகள் வளரும் வரை அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உள்ளது. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை விட்டு ஆரோக்கியமான பெரியவர்களாக வளர்வதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினையை வெற்றிகரமாக கடந்து வருவதற்கு உங்கள் குழந்தைகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது அவசியமானது.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை மாற்றும் ஆறு வழி முறைகள்.

1. கட்டாயப்படுத்தலை தவிர்த்தல்.

ஒரே வயதில் உள்ள குழந்தைகள் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான பழக்கங்களை எதிர்பார்க்க முடியாது. மற்ற குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இல்லையென்றால் அதனை உங்கள் குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களை அதற்காக தயார் செய்வதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம்.

2. சிறுநீர் கழிக்கும் ஒழுங்கை அதிகப்படுத்தல்.
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை சிறுநீர் கழிக்க செய்வதனால், சிறுநீர்பை வெறுமையாகும்.

3. திரவத்தின் அளவை மட்டுப்படுத்தல்.

இரவு நேரத்தில் அதிகளவான நீரினைக் குடிப்பதை தவிர்ப்பது சிறந்தது.

4. குழந்தகளை ஊக்குவித்தல்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்த இரவுகளை எண்ணி அதற்காக அவர்களைப் பாராட்டினால், அவர்களும் இலகுவாக பழகிக் கொள்வார்கள்.

5. படுக்கை எச்சரிக்கையை ஏற்படுத்தல்.
குழந்தைகள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் போது அவர்களை கழிவறையை பயன்படுத்துமாறு பயிற்சி கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம்.

6. உணர்வூக்கத்தை அதிகரித்தல்.

படுக்கையில் சிறுநீர் கழித்தால் படுக்கை துணியை மாற்றி, அதனை சலவைக்கு போடுவதற்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி இலகுவாக அவர்களின் பழக்கத்தை மாற்ற முடியும்.

பொறுமையினால் எல்லாவற்றையும் இலகுவாக வென்று விடலாம். உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக இந்த பழக்கத்தை மாற்றுவார்கள். அதற்கு போதியளவு நேரத்தை வழங்க வேண்டியது பெற்றோர்களது கடமை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*