உலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்த பிரான்ஸ் அதிபர்

(உலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்த பிரான்ஸ் அதிபர்)

ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பிரான்ஸ் அணி ஒவ்வொரு கோல் போடும்போதும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம்போட்டதையும், ஆரவாரமாக முழக்கம் எழுப்பியதையும் காண முடிந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மைதானத்திற்கு வந்திருந்து போட்டியை கண்டுகளித்தார்.
அவ்வப்போது சைகை அசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அவர், பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார். உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கையைவிட்டு எழுந்து, சாதாரண ரசிகர்களைப் போன்று துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #MacronCelebrates

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*