எது அழகானது..?

☔ எரிவதில் தீபம் அழகானது…….!!!
☔ சுடுவதில் சூரியன் அழகானது…….!!!
☔ சுற்றுவதில் புவி அழகானது…….!!!
☔ வளர்வதில் பிறை அழகானது…….!!!
☔ மின்னுவதில் விண்மீன் அழகானது……..!!!
☔ தவழ்வதில் குழந்தை அழகானது……..!!!
☔ குதிப்பதில் கடல் நீர் அழகானது……!!!
☔ விழுவதில் அருவி அழகானது……….!!!
☔ உறைவதில் பனி அழகானது……..!!!
☔ விளைவதில் பயிர்கள் அழகானது…….!!!
☔ தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது……!!!
☔ குளிர்ச்சியில் தென்றல் அழகானது……..!!!
☔ உழைப்பதில் வியர்வை அழகானது…….!!!
☔ பாடுவதில் குயில் அழகானது………!!!
☔ பறப்பதில் புறா அழகானது……..!!!
☔ கலையினில் அறுபத்துநான்கும் அழகானது……!!!
☔ உறவினில் நட்பு அழகானது……..!!!
☔ மொழிகளில் மழலை மொழி அழகானது…….!!!
☔ மலர்களில் ரோஜா அழகானது……
☔ மலர் வாசனையில் மல்லிகை அழகானது….
☔ கலர்களில் கருப்பே
அழகானது…..
☔ கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்…….
☔ எப்போதும் தாய்மை அழகானது……..!!!
☔ இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது…….!!!
☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்…..???
☔ குறை ஒன்றும் இல்லையே.!!

ஆக இத்தனை அழகையும் படைத்து, ரசிக்க நம்மை மனிதனாக படைத்த, எல்லாம் வல்ல இறைவன்.. அனைத்திலும் பேரழகு….
🌹✅🌷✅🌺

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*