ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு

(ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு)

ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான 28 தங்கபிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்கபிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவை 3 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடயவை எனவும் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கபிஸ்கட்டுக்கள் அடங்கிய சிகரட் பக்கற்றுகள், குறித்த பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*