ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கு, ஈடாக மாட்டார்கள்

(ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கு, ஈடாக மாட்டார்கள்)

இலங்கை திருநாட்டின் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த சமூகத்தொன்றாட்டிய ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கோ, டி.பி.ஜாயாவிற்கோ, ஏ.எம்.ஏ.அஸீஸிற்கோ ஏ.சீ.எஸ்.ஹமீடிற்கோ  ஈடாக மாட்டார்கள். கௌரவ இத்தலைர்களின் வெற்றிடத்தை இன்னும் எந்த முஸ்லிம் அரசியல் வாதிகளாளும் நிவர்த்திக்க முடியவில்லை.
அவர்கள் சமூக சிந்தனையோடு நாட்டின் சகல இனங்களோடும் இனங்கிச் சென்று பல விடயங்களை சாதித்தனர்.
ஆனால் இன்று இலங்கை முஸ்லிம்கள் நேரிய தலைமைத்துவமற்ற சமூகமாக மாற்றப்பட்டிருக்கின்றோம். இதே நிலை தொடருமானால் மேலும் நாம் பல வருடங்கள் பின் தள்ளப்படுவோம். எனவே இலங்கை நாடாளு மன்றத்தை  ஆளும் சுயநல அரசியல் போக்கு மாற்றப்பட வேண்டும்.
வாக்கு கேட்டு வரும் போது அரசியல் வாதிகளால் வழங்கும் வாக்குறுதிகள் வெற்றியின் பின்னர் முற்றுமுழுதாக மறுக்கப்படுகின்றன. எனவே தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் இடம் பிடிப்பதற்காக ஒரு முஸ்லிம் அரசியல்வாதி மற்ற முஸ்லிம் அரசியல்வாதியை பிழையாக போட்டுக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே முஸ்லிம்களின் நலனில் அக்கரை கொண்டு மர்ஹூம்களான பதியுதீன் மஹ்மூத், டி.பி.ஜாயா, ஏ.சீ.எஸ்.ஹமீட், ஏ.எம்.ஏ.அஸீஸ்;, டி.பி.ஜாயா போன்ற நேர்மையான அரசியல் தலைவர்களின் வழிகாட்டலில் நாடாளுமன்றத்தை அலங்கரித்தால் சிறு பிரச்சினைகள் கூட இலகுவாய் தீர்த்திடலாம் என்பது உறுதி.

-ஜே.அஷ்ரப்அலி-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*