கண்டியில் விசித்திரமான பலா மரம்!

(கண்டியில் விசித்திரமான பலா மரம்!)

கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*