“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்” – லங்கா சமசமாஜ கட்சி

(“கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்” – லங்கா சமசமாஜ கட்சி)

கண்டி வன்முறையில் மஹசொஹன் பலகாய அமைப்பு நேரடியாக தொடர்பு பட்டிருப்பது தெளிவாகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரே இவர்களை வழிநடத்தி யிருக்கின்றார் என்ற தகவலும் வெளிப்பட்டிருக்கின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலை வரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந் திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கண்டி பிரதேசத்தில் கடந்த வாரம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவமானது நாடுபூராகவும் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற காரணமாகியது. இந்த சம்பவமானது மிகவும் திட் டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டது.

என்பதை அரசாங்கம் உட்பட பலரும் ஏற் றுக்கொள்கின்றனர். ஆனால் அரசாங்கம் தேவையுடன் செயற்பட்டிருந்தால் இதனை தடுத்திருக்கலாம்.

அத்துடன் கண்டியில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவம் தற்போது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள துடன் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது வெளிப்பட்டிருக்கும் தகவல் களின் பிரகாரம் இந்த வன்முறைச் சம்பவங் களுக்கு மஹசொஹன் அமைப்பு நேரடி யாக தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன் இவர்களின் பின்ன ணியில் மேலும் பலர் இருப்பதாகவும் அறி யவருகின்றது. | வன்முறையாளர்களை முன்னின்று வழி நடத்தி இருப்பது அரசாங்கத்தில் இருக்கும் பிரபல அமைச்சர் ஒருவர் என்பதும் பரவ லாக அறிந்த விடயமாகும்.

இதில் மறைப் பதற்கு ஒன்றும் இல்லை . அத்துடன் குறித்த
அமைச்சருக்கு ஆரம்பத்தில் இருந்தே முஸ்லிம் விரோத சிந்தனை இருந்தது என்பதும் யாரும் அறிந்த விடயமாகும். இதிலி ருந்து அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கவேண்டும் என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் மீது மக்கள் குறைகூறிவருகின்ற நிலையில் இந்த வன்முறைச் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
குறிப்பாக கூட்டு எதிரணிமீது குற்றம் சுமத்தி வருகின்றது. ஆனால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

அதன் பிரதிபலனே தேர்தலில் வெளிப்பட்டது. அதனால் அரசாங்கம் தங்களின் தவறுகளை மறைப்பதற்காக இவ்வாறான இனவாத சம் பவங்களை தூண்டிவருகின்றது.

அத்துடன் ஜே. ஆர். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 1977ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்தபோது திறந்த பொருளா தார கொள்கையை அறிமுகப்படுத்தியது.

அத்துடன் மக்களுக்கு பல வாக்குறுதிக ளையும் வழங்கியிருந்தது. ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனபோது, மக்களை இந்த பிரச்சினையில் இருந்து திசை திருப்ப தமிழ் மக்கள் விரோத வன்முறையை தூண்டியது. அதன் பின்னணியாகவே 83 கலவரம் ஏற்பட்டது.

தற்போதும் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற தவறியுள்ளது. அதனால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் செயற்படுவதை தவிர்க்கவும் அரசாங்கத்தின் பிரச்சினைகளை மறைக்கவும் முஸ்லிம் வன்முறையை தோற்றுவித்துள்ளது என்றார்.

-எம்.ஆர்.எம்.வஸீம்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*