களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை

(களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை)

மின்சார சபை மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே, ஜா-எல நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுநாயக்க/ சீதுவ, கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மேற்படி நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*