கொழும்பு பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லுாாி: 100 வருடங்கள் பூர்த்தி

(கொழும்பு பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லுாாி: 100 வருடங்கள் பூர்த்தி)

கொழும்பு மத்திய தொகுதியில் முஸ்லீம் மாணவிகளுக்கு 3 மொழிகளிலும் கல்வி போதிக்கும் ஒரு பாடசாலையாக  கொழும்பு பாத்திமா முஸ்லீம் மகளிர் கல்லுாாி இயங்கி வருகின்றது.

இக் கல்லுாாியில் தற்பொழுது 2537 மாணவிகளும்  115க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் கல்வி போதிக்கின்றனா். இக் கல்லுாாி 1918ல்  50 மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு 2018ல் மாா்ச்சில் 100 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இக் கல்லுாியின் அதிபராக  சிஹானா அஸ்லம் தற்பொழுது  கடமையாற்றி வருகின்றது.

நுாற்றாண்டு விழா, பரிசளிப்பு வைபவங்கள் நேற்று கொழும்பு தாமரை தடாக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா,கலந்து கொண்டு மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி வைத்தாா்.

அத்துடன்   அமைச்சா் பைசா் முஸ்தபா, ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபு ரஹ்மான், எஸ்.எம் மரைக்காா், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மொஹமட் பாயிஸ், அர்சத் நிசம்டீன். பிரதிமேயா் முஹமட் இக்பால் , கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி,  உடப்ட பழைய மாணவிகள்  ஆசிரியைகளும்  பெற்றாா்களும் கலந்து சிறப்பித்தனா்.

-அஷ்ரப் ஏ சமத்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*