சவூதியில் இலங்கை பெண்ணுக்கு, நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

(சவூதியில் இலங்கை பெண்ணுக்கு, நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்)

சவூதியில் வீட்டு வேலைக்காக சென்ற பெண் ஒருவர், வளர்ப்பு தாயாக மாறி இன்று அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், சவூதியில் உள்ள ஷேக் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். ஷேக்கின் குழந்தைகளை சிறு வயதில் இருந்து இவரே வளர்த்து வந்துள்ளார். குழந்தைகள் அனைவரும் பெரியவர்களாகி தங்களது வளர்ப்பு தாயாகவே அவரை பார்த்தனர்,
சமீபத்தில், இலங்கையில் வசித்த அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாக ஷேக் குடும்பத்திற்கு தகவல் வந்துள்ளது, மிகுந்த வேதனை அடைந்த அவர்கள் இதனை அப்பெண்ணிடம் தெரிவிக்க தயங்கினர்.
எனவே, அவரின் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உடனடியாக விமான டிக்கெட் எடுத்து இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண், மகன் போல வளர்த்தவர்களில் ஒருவரே விமான நிலையத்துக்கு வந்து ‘ எல்லாம் அல்லாஹ் பார்த்துக்கொள்வார் தைரியமாகப் போய்வாருங்கள் ‘ என்று கூறி, பணிப்பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பிவைத்தார்.
தனது சமூகவலைதளத்திலும், தனது வளர்ப்பு தாயின் பாசம் குறித்து பகிர்ந்துகொண்டார், அவரின் செல்லப்பிள்ளைகளாக வளர்ந்தோம், அவர் மீண்டும் இங்கே வர ஆசைப்பட்டால், அவரை கடைசிவரை பார்த்துக்கொள்வோம் என பதிவிட்டிருந்தார்,
இந்த பதிவினை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*