சைவம் என நினைத்து சாப்பிடும் அசைவ உணவுகள்..! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

(சைவம் என நினைத்து சாப்பிடும் அசைவ உணவுகள்..! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!)

நாம் சாப்பிடும் உணவு சைவ உணவுகள் அசைவ உணவுகள் என இரு வகையில் உள்ளது.உணவுபிரியர்களும் சைவ உணவு பிரியர்கள் அசைவ உணவு பிரியர்கள் என இரு வகையில் உள்ளனர்.

இதில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சைவ உணவுகள் உண்பதில் எந்த பிரச்னையும் செய்வதில்லை.ஆனால் சைவ உணவு பிரியர்கள் ஒருவரும் அசைவ உணவு பொருட்களை தொடுவதில்லை.ஆனால் உண்மையில் சைவ உணவு பிரியர்கள் தினசரி உண்ணும் சில உணவுகள் உண்மையில் சைவம் கிடையாது அசைவம் எனக்கூறினால் நம்ப முடிகிறதா? உண்மைதான் மேற்கொண்டு படியுங்கள்.

சாலட் :
சாலட் :நீங்கள் விரும்பி சாப்பிடும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டுமே இருப்பதாக நீங்கள் நினைத்து கொண்டிருப்பீர்கள்.அது என்னமோ உண்மைதான்.ஆனால் சாலட்டில் சுவைக்காக சேர்க்கப்படும் சாஸில் சுவைக்காக முட்டை சேர்க்கப்படுகிறது.இது அனைத்து விதமான சாஸ்களிலும் சேர்க்கபடுகிறது.எனவே நீங்கள் சாஸ் வாங்கும்போது அதன் மேலுள்ள லேபிளை படித்து அதில் கலந்திருப்பது என்ன என்பதை அறிந்து பின்னர் வாங்கவும்.

சூப் :
சூப் :சூப் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா??கடைகளில் நாம் சாப்பிடும் சூப் மிகவும் சுவையாக இருக்க ஒரு காரணம் உள்ளது.உங்களுக்கு சூப்புடன் தரப்படும் சாஸில் மீன் கலந்திருக்கும் என்பது இங்கு பல பேருக்கு தெரியாது.முடிந்தவரை சாஸ் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.அல்லது அந்த சாஸ் பற்றி கேட்டறறிந்து உண்ணுங்கள்.

சீஸ் :
சீஸ் :இன்று நாம் உண்ணும் ஏக உணவுகளில் முக்கியமாக கலந்திருப்பது சீஸ்.தோசை முதல் பிசா வரை சீஸ் இல்லாத உணவுப்பொருட்களே கிடையாது.இந்த சீஸ் சைவ உணவுதானே என நீங்கள் நினைக்கலாம்.ஆனால் கிடையாது சுவைக்காக சேர்க்கப்படும் இந்த சீசில் என்சைமஸ் எனும் விலங்கின் கொழுப்பு கலந்துள்ளது.இதை தவிர்க்க லேபிளில் உள்ள பொருட்களை பரிசோதித்து வாங்க வேண்டும்.இந்த கொழுப்பு கலக்காத சீஸ்களும் மார்கெட்டில் உள்ளன.

ஜெல்லி :
ஜெல்லி :ஜெல்லியை பார்த்தாலே உங்கள் அனைவருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவுப்பொருள் ஜெல்லி.முக்கியமாக இந்த ஜெல்லியில் பயன்படுத்தப்படும் பொருள் ஜெலட்டின் பவுடர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.ஆனால் அந்த ஜெலட்டின் பவுடர் தயாரிக்க விலங்குகளின் கொழுப்புகளே பயன்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.

நாண் :
நாண் :நாண் சைவப்போருல்தானே அதிலென்ன அசைவம் உள்ள்ளது என்று நீங்கள் கேக்கலாம்.ஆனால் உண்மையில் சில நாண்வகைகள் உண்மையில் முற்றிலும் அசைவமாக இருப்பதே உண்மை.இந்த நான் கடைசி வரை பசைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதில் சில இடங்களில் முட்டை சேர்க்கப்படுகிறது.

சர்க்கரை :
சர்க்கரை :என்னடா இது கொடுமை ! சர்க்கரை எப்படி அசைவமாகும் என நீங்கள் சொல்வது கேட்கிறது.ஆனால் உண்மையில் நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை விரும்பியாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.சுத்திகரிக்கப்பட்ட சர்க்க்கரையில் நேச்சுரல் கார்பன் கலக்கப்படுகிறது.இந்த நேச்சுரல் கார்பன் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*