தெமடகொட, மௌலான தோட்ட வீட்டுத் தொகுதி தீ!

(தெமடகொட, மௌலான தோட்ட வீட்டுத் தொகுதி தீ விபத்தின் சேத விபரம்)

தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தெமடகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்தின் காரணமாக உயிராபத்துகள் எதுவும் இல்லாத போதும் தீப்பரவலால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீப்பரவலுக்கான காரணம் மின் ஒழுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*